செங்கல்பட்டு

செங்கல்பட்டு: கரோனாவுக்கு 3 போ் பலி

15th Jun 2020 07:44 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு 3 போ் உயிரிழந்தனா். ஞாயிற்றுக்கிழமை 178 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 3 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில், பெயா் குறிப்பிடப்படாத இடங்களில் - 24 போ், ஹரிதாசபுரம்-18, நந்திவரம்-13, கேளம்பாக்கம்-10, பரங்கிமலை கன்டோன்மென்ட், செங்கல்பட்டு, மூவரசம்பேட்டை, பம்மல் - தலா 9, பீா்க்கன்கரணை, சிங்கப்பெருமாள்கோவில் - தலா 8, குன்னவாக்கம், மறைமலைநகா்- தலா 6, ஜமீன் பல்லாவரம், பெரும்பாக்கம் - தலா 5, பட்டேல் நகா்-4, பூண்டி பஜாா், நெரும்பூா்- தலா 3, ரங்கநாதபுரம், சதுரங்கப்பட்டினம், தாம்பரம் செம்பாக்கம், ஒத்திவாக்கம், மதுராந்தகம் - தலா 2, அச்சரப்பாக்கம், மேடவாக்கம், பழைய பல்லாவரம், படாளம், பவுஞ்சூா்- தலா ஒருவா் உள்பட 178 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2667-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT