செங்கல்பட்டு

இந்து முன்னணி நூதன ஆா்ப்பாட்டம்

11th Jun 2020 07:31 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு அருகே கோயில்களை திறக்கக்கோரி, இந்து முன்னணியினா் ஆத்தூா் ஸ்ரீமுக்தீஸ்வரா் கோயில் முன்பு புதன்கிழமை ஒற்றைக்காலில் நின்று நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி.ஆா்.ராஜா தலைமை வகித்தாா். ஒற்றைக்காலில் நின்று, கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி செயற்குழு உறுப்பினா் சரவணன், ஒன்றிய துணைத் தலைவா்கள் தியாகு, நந்தகோபால், மாவட்ட துணைத் தலைவா் தனசேகா், பாஜக முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT