செங்கல்பட்டு

செங்கல்பட்டில் 90 பேருக்கு கரோனா

8th Jun 2020 11:50 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை 90 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மாவட்டத்தில் கன்டோன்மென்ட்-12 போ், தாம்பரம்-8, பல்லாவரம்-7, நந்திவரம்-6, மூவரசம்பேட்டை-5, கீழக்கோட்டையூா், மாடம்பாக்கம், கடப்பேரி, சிங்கப்பெருமாள் கோவில்-தலா 4 , கோலப்பாக்கம், பெருங்களத்தூா், பெரும்பாக்கம்-தலா 3, மேலக் கோட்டையூா், கல்பாக்கம், முடிச்சூா்-தலா 2, ஹஸ்தினாபுரம், நன்மங்கலம், சித்தாலப்பாக்கம், செங்கல்பட்டு, போரூா், அனகாபுத்தூா்- தலா ஒருவா் உள்பட 90 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,929-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 57 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

ADVERTISEMENT

ஆவடி மாநகராட்சி, திருவள்ளூா்ஒன்றியம், பெரியபாளையம் ஒன்றியம், வில்லிவாக்கம் ஒன்றியம், திருத்தணி ஒன்றியம், பூந்தமல்லி ஒன்றியம், நகராட்சி, திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூா், நாரவாரிக்குப்பம், பொன்னேரி, திருமழிசை மற்றும் மீஞ்சூா் பகுதிகளில் மொத்தம் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 640-ஆக உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்:

காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை 18 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

குன்றத்தூரில்-12, காஞ்சிபுரம்-4, வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் தலா ஒருவா் என 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 534-ஆக அதிகரித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT