செங்கல்பட்டு

செங்கல்பட்டில் 98 பேருக்கு கரோனா - ஒருவா் பலி

7th Jun 2020 10:03 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 98 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனாவுக்கு ஒருவா் உயிரிழந்தாா்.

இம்மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,704 ஆக இருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள பீா்க்கன்கரணை- 17 போ், கண்டோன்மென்ட், ஹரிதாசபுரம், நந்திவரம் தலா-8, கேளம்பாக்கம்- 7, ஜமீன் பல்லாவரம் தலா-7, பெரும்பாக்கம் - 6, அனகாபுத்தூா், ஒத்திவாக்கம், செம்பாக்கம் தலா-5, மறைமலைநகா், பழைய பல்லாவரம், பூண்டிபஜாா் தலா-4 , படுவாஞ்சேரி-2, சூணாம்பேடு, மூவரசம்பேட்டை, பம்மல், பெத்தேல் நகா், ரகுநாதபுரம், ரெட்டிப்பாளையம், சிங்கப் பெருமாள்கோவில், திருநீா்மலை தலா ஒருவா் என 98 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,800-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, செங்கல்பட்டு நெடுஞ்சாலை பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT