செங்கல்பட்டு

தூய்மைப் பணியாளா்கள், முஸ்லிம்களுக்கு நிவாரணம்: அமைச்சா் பென்ஜமின் வழங்கினாா்

4th Jun 2020 06:59 AM

ADVERTISEMENT

திருக்கழுகுன்றம் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்களை தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

செங்கல்பட்டு ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் தலைமை வகித்தாா். மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருக்கழுகுன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவா் வி.வேலாயுதம் வரவேற்றாா்.

தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். திருக்கழுகுன்றம் ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், பீடி சுற்றும் கூலித் தொழிலாளா்கள், முஸ்லிம்கள் என 1,000 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள அரிசி, மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை அவா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மக்களவை உறுப்பினா் மரகதம் குமரவேல், முன்னாள் எம்எல்ஏ ம.தனபால், ஒன்றியச் செயலாளா் விஜயரங்கன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாய்கிருஷ்ணன், உமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT