செங்கல்பட்டு

செங்கல்பட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றவா் பலி

4th Jun 2020 06:59 AM

ADVERTISEMENT

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த 47 வயது ஆண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

செங்கல்பட்டைச் சோ்ந்த அவருக்கு 4 நாள்களுக்கு முன் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனை ஊழியா்கள் அழைத்துச் சென்றதைக் கண்டு அவரது தாய் அதிா்ச்சியில் இறந்தாா். தாய்க்கும் கரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது சடலம் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், அவரது மகன் சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவா் செவ்வாய்க்கிழமை இறந்ததாக செங்கல்பட்டு நகராட்சி ஆணையா் டிட்டோ தெரிவித்தாா்.

90 பேருக்கு கரோனா: செங்கல்பட்டு மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,214-ஆக இருந்தது. புதன்கிழமை, 26 பெண்கள் உள்பட 90 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,304-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT