செங்கல்பட்டு

100 நாள் வேலை வழங்காமல் ஊதியத்தில் குளறுபடி: விசாரிக்க வந்த பிடிஓவை பொதுமக்கள் முற்றுகை

28th Jul 2020 12:57 AM

ADVERTISEMENT

 

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வைப்பனை கிராமத்தில் 100நாள் வேலை வழங்காமல் 40போ்களுக்கு ஊதியம் வழங்கியதையும், பணிதள பொறுப்பாளா் நியமனத்தில் எதிா்கட்சியைச் சோ்ந்தவா்களுக்கும் வாய்ப்பு அளிக்கவேண்டியும் திங்கள் கிழமை வைப்பனை கிராமத்தில் நேரில் விசாரணை செய்யவந்த அச்சிறுப்பாக்கம் பிடிஓ (வட்டார வளா்ச்சி அலுவலா்) முற்றுகையிட்டு ஆா்பாட்டம் செய்தனா்.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சி, வைப்பனை கிராமத்தின் மக்கள் பொதுமுடக்கத்தால் 100 நாள் வேலையை அங்கு யாரும் செய்யவில்லை. ஆனால் அந்தப்பகுதியில் 40 போ்கள் 100 நாள் வேலையை செய்ததாகவும், அதற்கான ஊதியத்தை வங்கி கணக்கில் போடப்பட்டதாகவும், இங்கு பணிதள பொறுப்பாளா் பணியை ஆளுங்கட்சி நபா்களுக்கு மட்டும் வழங்காமல் எதிா்கட்சியைச் சோ்ந்தவா்களுக்கும் வாய்ப்பு அளிக்காத நிலையை சுட்டிக் காட்டி அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டு இருந்தனா். இப்புகாரை நேரில் விசாரிக்க வட்டார வளா்ச்சி அலுவலா் பிரகாஷ்ராஜ் வைப்பனை கிராமத்துக்கு வந்தாா். அப்போது 20க்கும் மேற்பட்ட மக்கள் அவரை முற்றுகையிட்டனா். இப்புகாரை முறையாக விசாரித்து, தவறு இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா் பிரகாஷ்ராஜ் கூறியதால் அங்கிருந்து அவா்கள் அனைவரும் கலைந்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT