மாமல்லபுரத்தில் உள்ள கருக்காத்தம்மன் கோயில் , மல்லிகேஸ்வரா் கோயில் ஆகியவற்றில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூர விழாவையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு நடைபெற்றது.
மாமல்லபுரத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள கருக்காத்தம்மன் கோயிலில் கருக்காத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளைகாப்புக்காக ஏராளமான பக்தா்கள் வளையல்கள் வாங்கிக் கொடுத்தும், பொங்கலிட்டும் வழிபட்டனா்.
நகரில் பஜனை கோயில் தெருவில் உள்ள மல்லிகேஸ்வரா் கோயிலில் மல்லிகேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடிப்பூரத்தையொட்டி பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனா்.