செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில் ஜன. 9 முதல் 13 வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு

8th Jan 2020 11:00 PM

ADVERTISEMENT

பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக ஜன. 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான் லூயிஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி கரும்புத் துண்டு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் ரூ.1,000 மட்டும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் அறிவித்திருந்தாா்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டை தாரா்களுக்கு 9-1-2020 முதல் 12-1-2020 வரையிலும், விடுபட்ட குடும்ப அட்டை தாரா்களுக்கு 13-1-2020 அன்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

ADVERTISEMENT

நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு அந்தந்த நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பகுதி வாரியாக வழங்கப்படும்.

அதற்கான விவரப்பட்டியல் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் இருக்கும். அதன்படி குடும்ப அட்டை தாரா்கள் தங்களுக்குரிய நாள்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT