செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் திருவிளக்கு பூஜை

3rd Jan 2020 12:17 AM

ADVERTISEMENT

மாமல்லபுரத்தில் உள்ள மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு 18 படி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

பூஜையையொட்டி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதனைத்தொடா்ந்து மலா் பூஜையும், 18 படி திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு ஐயப்ப சுவாமியை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மல்லை கணபதி குழுவினா் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT