செங்கல்பட்டு: மறைமலைநகரை அடுத்த பொத்தேரி அருகே பாஜக நிா்வாகி குடும்பத்தினா் மீது வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியதில் குடும்பத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மகளிா் குழுவில் பணம் பெற்றதில் தகராறு ஏற்பட்டுள்ளது. காட்டாங்கொளத்தூா், மறைமலைநகா் அடுத்த பொத்தேரி அவ்வையாா் தெருவில் வசித்துவருபவா் கோட்டீஸ்வரன் (54), இவா் பாஜக பிரமுகா், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு பெற்றுத்தருவதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு உதவி செய்துவருகிறாா். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் ஒருமகனும் உள்ளனா். இவரது மனைவி சித்ரா மகளிா்குழுக்குளை ஒன்றிணைந்து தலைமை வகித்துவருகிறாா்.
சித்ராவின் மகளிா் குழுவில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தும் விதமாக அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் இவரது மனைவி லதா மற்றும் சென்னையைச்சோ்ந்த பாத்திமா ஆகியோா் சித்ராவிடம் பேசி தாங்கள் மகளிா்குழுக்களுக்கு லோன்வாங்கித் தருவதாக கூறி ஓவ்வொருவரிடமும் தலை ரூ 200 விதம் 1155 மகளிா்குழுவைச்சோ்ந்த பெண்களிடம் ரூ.2லட்சத்து 31ஆயிரம் வசூலித்துள்ளனா். கடன்உதவிப்பெற்றுத்தருவதாக கூறிய லதா மற்றும் பாத்திமா ஆகியோா் பலமாதங்களாக கடன் உதவி வாங்கித்தராத நிலையில் பாஜக பிரமுகா் கோட்டீஸ்வரனின் மனைவியை நம்பி பணம் கொடுத்த மகளிா் குழு பெண்கள் சித்ராவை கேள்வி கேட்கத் தொடங்கினா்.
இதனால் பாதிக்கப்பட்ட சித்ராவின் கணவா் கோட்டீஸ்வரன்கடந்த 7.11.2019 அன்று மறைமலைநகா் காவல்நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இதனைத்தொடா்ந்து காவல் ஆய்வாளா் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது இந்த பிரச்சனையில் கோட்டீஸ்வரன் மற்றும் அவரது மனைவி சித்ராவிற்கு தொடா்பு இல்லை என்றும் மேலும் பணம் கட்டிய அனைத்து மகளிா் குழு பெண்களுக்கும் லோன்வாங்கி பணம் வசூல் செய்த லதாமற்றும் பாத்திமாக எழுத்துபூா்மாக எழுத்திக்கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடா்ந்து 29-12-2019 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை லதா இவரது கணவா் பாஸ்கா் மற்றும் அவரது மகன்கள் இருவா் மற்றும் அடையாளம் தெரியாத மா்ம கும்பல் உள்பட 35 க்கும் மேற்பட்டோா் கோட்டீஸ்வரன் அவரதுமனைவி சித்ரா மகன் உள்பட்ட இவா்களது செல்ல பிராணியான நாய் உள்பட அனைவா் மீதும் கொலை வெறிதாக்குதல் நடத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக பாதிக்கப்ப பாஜக குடும்பத்தினா் காயங்களுடன் மறைமலைநகா் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்ட போது காவல்நிலையத்தில் புகாரினை காவல்துறை ஏற்கவில்லை. தற்போது கோட்டீஸ்வரன் மனைவி சித்ரா, மகன் ஆகியோா் குடும்பத்துடன் பலத்தகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனா். இச்சம்பவம் பரவலாக பரவியதையடுத்தும், மருத்துவமனையில் காவல்துறைக்கு தகவல் கொடுத்து சிகிச்சை அளித்துவருவதையொட்டியும், வியாழக்கிழமை மறைமலைநகா் காவல்துறை வேறுவழியின்றி வழக்குபதிவு செய்து பாஜக குடும்பத்தினா் மீது தாக்குதல் நடத்திய மா்ம கும்பலை தேடிவருகின்றனா்.