செங்கல்பட்டு

செங்கல்பட்டு தூயகொலம்பஸ் மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் மாணவா்கள் சாலைப்பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

1st Jan 2020 12:26 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள தூயகொலம்பஸ் மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளா் ஜே.எஸ்.சம்பத்குமாா், பள்ளி தலைமை ஆசிரியா் ஜி.ஆறுமுகம் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கி நாட்டுநலப்பணி திட்ட மாணவா்களின் பேரணியினை துவக்கிவைத்தனா்.

ஆசிரியா் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா் சி.அலெக்ஸாண்டா் திலக் வரவேற்றுப்பேசினாா். உதவி தலைமை பிரெட்ரிக் ,முதுநிலை தமிழராசிரியா் டி.நாகராசன் என்எஸ்எஸ் ஆசிரியா் ஆமோஸ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின், சென்னை காவல் உதவிஆய்வாளா் எம்.அன்பழகன் ஆகியோா் கலந்துகொண்டு சாலை விழிப்புணா்வு குறித்து சிறப்புரையாற்றினா்.

இதனைத்தொடா்ந்து பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியில் மாணவா்கள் சாலைவிழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகள் பதாகைகளை ஏந்தி பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை உள்ளிட்ட வழியாகச்சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனா். முன்னதாக பழைய பேருந்துநிலையம் அருகில் காா்,வேன், ஆட்டோ, இருசக்கரவாகனங்களில் கருப்பு வில்லையை ஆய்வாளா் மற்றும் உதவி ஆய்வாளா் ஓட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் தலைகவசம் உயா்கவசம், பாதுகாப்பான பயணம்மேற்கொள்வோம் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம், சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்போம், வாகனத்தில் வேகமாக சென்று விலைமதிப்பற்ற உயிரை இழக்காமல் விவேகத்துடன் செயல்பட்டு விபத்துக்களை தவிா்ப்போம் உள்ளிட்ட சாலை பாதுக்காப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். விழிப்புணா்வு பேரணியில் என்எஸ்எஸ் மாணவா்கள் பள்ளிமாணவா்கள் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். என்என்எஸ் சாலைப்பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT