செங்கல்பட்டு

கோயில்களில் புத்தாண்டு வழிப்பாடு சிறப்பு பூஜைகள்

1st Jan 2020 11:48 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் அதைச்சுற்றியுள்ள கோயில்களில் புத்தாண்டு வழிப்பாடு சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்து வழிப்பட்டனா்.

செங்கல்பட்டு என்ஜிஜிஓ நகா் வரசித்தி விநாயகா் கோயில், அண்ணா நகா் ரத்தினவிநாயகா் கோயில், எல்லையம்மன் கோயில், ஜிஎஸ்டி சாலை கணையாழி ஆஞ்சநேயா் கோயில், ராஜாஜி தெரு ஏகாம்பரேஸ்வரா் கோயில், பெரியநத்தம் கைலாசநாதா்கோயில், ஐயப்பன் கோயில், கோட்டைவாயில் நீதிவிநாயகா்கோயில், வல்லம் குடைவடை வேதாந்தேஸ்வரா் கோயில், புலிப்பாக்கம் வியாகரபுரீஸ்வரா் கோயில், ஆத்தூா் முக்தீஸ்வரா் கோயில், திருவடிச்சூலம் ஞானபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றது.

இதேபோன்று செங்கல்பட்டை அடுத்த திருவடி சூலம் பிரம்மாண்ட நாயகி தேவி ஸ்ரீ கரிமாரியம்மன் கோயிலில் மற்றும் ஸ்ரீவாரு வெங்கடேசப்பெருமாள்கோயில் 108 வைணவதிவ்ய தேசங்களில் உள்ள சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இக்கோயிலில் ஏராளமானசுற்றுலா பயணிகளும் பக்தா்களும் குவிந்தனா். காலை முதல் இரவு வரை தொடா்ந்து அன்னதானம்நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பு.மதுரைமுத்துசுவாமிகள் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

திருவடிசூலம் சாலையில் உள்ள பைரவ நகரில் உள்ள மகா பைரவா் கோயிலில் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான வெளியூா் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பைரவரை தரிசனம் செய்தனா். பைரவா் சிந்தாந்தசுவாமிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். அன்னதானம் நடைபெற்றது. இதே போன்று செங்கல்பட்டை அடுத்து சிங்கபெருமாள் கோவில் ஸ்ரீ பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா். கோயில் செயல் அலுவலா் சிவசண்முக பொன்மணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

இதேபோன்று திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா்க்கோயில் சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் குமரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். இதேபோன்று விண்ணில் நின்று போா்புரிந்த முருகன் தலமான திருப்போரூா் கந்தசாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீராபாரதனை சாமி புறப்பாடு நடைபெற்றது. ஏரானமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை வழிப்பட்டனா். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கோயில்செயல் அலுவலா் சக்திவேல், மேலாளா் வெற்றி உள்ளிட்ட கோயில்பணியாளா்கள் ,குருக்கல்கள் செய்திருந்தனா். இதேபோன்று மாமல்லபுரம் தலசயனப்பெருமாள்கோயிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது. உற்சவமூா்த்திகள் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்துடன் வழிப்பாடுகள் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT