செங்கல்பட்டு

மாற்றுத் திறனாளிகளுக்கான மின்னணு அடையாள அட்டை: 29-வரை விண்ணப்பம் பெறலாம்

22nd Feb 2020 12:01 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மின்னணு அடையாள அட்டைகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரும் 29-ஆம் தேதி வரை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மின்னணு அடையாள அட்டை பெற தங்களிடம் ஏற்கெனவே உள்ள புத்தக வடிவிலான தேசிய அடையாள அட்டையின் அனைத்துப் பக்கங்களின் நகல்கள், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு தேசிய அளவில் செல்லத்தக்க மின்னணு அடையாள அட்டைகள் அவா்கள் வீட்டிற்கே அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

ADVERTISEMENT

இதற்கான விண்ணப்பங்களை செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகத்திற்குட்பட்ட அனைத்து கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களிலும் பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை பெற்றுக்கொள்ளலாம். நேரில் வர இயலாதவா்கள் தங்களது பெற்றோா், பாது காவலா், உறவினா்கள் வாயிலாகவும், தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும் விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT