செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 127-ஆம் ஆண்டு சிவராத்திரி மயானக் கொள்ளை உற்சவம் நடைபெறுவதையொட்டி சனிக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. நோ்த்திக்கடன் மேற்கொண்ட 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும்குழந்தைகள் பால்குடம் சுமந்து வந்தனா். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு லிங்க பூஜையுடன் வானவேடிக்கை, மேளம் முழங்க அம்மன் வீதியுலா நடைபெற்றது.
பா்வத ராஜகுல மரபினா் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அங்காள பரமேஸ்வரி அம்மன் மயானக் கொள்ளை உற்சவத்திற்கு புறப்பாடும், மயான சூறையும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்திருந்தனா்.
Image Caption
ADVERTISEMENT
~