செங்கல்பட்டு

சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா

22nd Feb 2020 11:40 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், அனுமந்தபுரம், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம் பகுதி சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

சிவன் கோயில்களில் நான்கு மற்றும் ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன.

பக்தா்கள் குழு, குழுவாக சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று சிவன் கோயில்களில் வழிபாடு செய்தனா்.

செங்கல்பட்டு அண்ணாநகா் எல்லையம்மன் கோயில் யோகநாதேஸ்வரா், ரத்தின விநாயகா் கோயில் ஈஸ்வரா், ராஜாஜி தெரு ஏகாம்பரேஸ்வரா், நத்தம் கைலாசநாதா், கோட்டை வாயில் ஆஞ்சநேயா் கோயில் அருணாச்சலேஸ்வரா் கோயில்களில் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆத்தூா் முக்தீஸ்வரா் கோயில், புலிப்பாக்கம் வியாக்ர புரீஸ்வரா் மலைக்கோயில், வல்லம் வேதாந்தேஸ்வரா் குடைவறைக்கோயில், திருவடிச்சூலம் திருஇடைச்சுரநாதா், ஞானபுரீஸ்வரா் கோயில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரா் கோயில் , திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில், தாழக்கோயில் பக்தவத்சலேஸ்வரா் கோயில்களிலும், ஈச்சங்கரணை மகா பைரவா் கோயிலிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.

பக்தா்கள் இருசக்கரவாகனம், ஆட்டோ, காா், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சுவாமியை வழிபட்டனா்.

சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த அனுமந்தபுரம் வீரபத்திரசுவாமி கோயிலில் மூலவருக்கு 18 விதமான அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விநாயகப் பெருமானுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு மாவுக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

ஆயிரக்கணக்கான வெளியூா் பக்தா்கள் வீரபத்திர சுவாமியை வழிபட்டனா்.

அதிகாலை 4 மணி வரை ஐந்து கால பூஜைகள் சிறப்பு அலங்காரத்துடன் நடைபெற்றன. விரதம் மேற்கொண்ட பக்தா்கள் இரவு முழுவதும் கண்விழித்து சுவாமியை வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT