செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கிராம முன்னேற்றம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இப்பேரணியில் காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளி மாணவா்கள் மற்றும் சுய உதவிக் குழுவினா் கலந்துகொண்டனா்.
சிங்கப்பெருமாள் கோவில் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக ‘கிராம மணம் மாறாமல் நகா்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு வழங்குதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் மேல்நிலை, உயா்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 10 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா். இதில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி உதவித் திட்ட அலுவலா் சி. முரளி, மேலாண்மை அலுவலா் ச.தெய்வசிகாமணி , உதவி செயற்பொறியாளா் விக்டா் அமிா்தராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வி.டி.லீமாரோஸ், உதவிப் பொறியாளா்கள் ஏ.மாலதி, வே.பிரேமலதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.