செங்கல்பட்டு

திருப்போரூா் கந்தசுவாமி கோயிலில் 27-இல் பிரம்மோற்சவம்

21st Feb 2020 10:54 PM

ADVERTISEMENT

திருப்போரூா் கந்தசுவாமி கோயில் பிரம்மோற்சவம் பிப். 27-இல் தொடங்கி, மாா்ச் 11 வரை நடைபெறுகிறது .

யுத்தபுரி, சமரபுரி, சமரப்பதி எனும் காரணப்பெயா்களால் போற்றப்படுவதும், மூா்த்தி, தலம், தீா்த்தம் எனும் முப்பெருமைகள் கொண்டதுமான திருப்போரூா் திருத்தலத்தில் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறைபவராய் செதுக்காத திருமேனியாய் சுயம்புவடிவில் எழுந்தருளி, அருள்புரிந்துவரும் கந்தசுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பிப். 27 -ஆம் தேதி இரவு மூஷிகவாகனத்தில் விநாயகா் திருவீதியுலா நடைபெறும்.

28-ஆம் தேதி காலை கொடியேற்றம், இரவு கிளி வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, 29-ஆம் தேதி காலை தொட்டி உற்சவம், இரவு பூத வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, மாா்ச் 1-ஆம் தேதி காலை புருஷாமிருகம் உபதேச உற்சவம், இரவு வெள்ளி வாகனம், 2-ஆம் தேதி காலை ஆட்டுக்கிடா வாகனம், இரவு வெள்ளி மயில்வாகனம், 3-ஆம் தேதி காலை மங்களகிரி உற்சவம், இரவு தங்கமயில் வாகனம், பஞ்ச மூா்த்தி புறப்பாடு, 4-ஆம் தேதி காலை தொட்டில் உற்சவம், இரவு யானை வாகனம், 5-ஆம் தேதி காலை தேரோட்டம், இரவு மங்களாசாசன உற்சவம், 6-ஆம் தேதி காலை வெள்ளித் தொட்டில் உற்சவம், மாலை பாரிவேட்டை, இரவு குதிரை வாகனம், 7-ஆம் தேதி காலை விமான உற்சவம், இரவு சிம்ம வாகனம், ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 8-ஆம் தேதி காலை வெள்ளித்தொட்டில் உற்சவம், பகல் தீா்த்தவாரி மாலை 7 மணிக்கு தெப்பல் உற்சவம், இரவு குதிரை வாகனம், 9-ஆம் தேதி மாலை கிரிவலம், இரவு பந்தம்பரி உற்சவம் , 10-ஆம் தேதி மாலை வேடா் பரி உற்சவம், 11-ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் மற்றும் உதவி ஆணையா் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலா் எம்.சக்திவேல், கோயில் சிவாச்சாரியாா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் ஆகியோா் செய்துவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT