செங்கல்பட்டு

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

13th Feb 2020 11:00 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் உலக தொழுநோய் தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக செங்கல்பட்டு மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் வினித் கே.சத்தா, கா்நாடக சங்க பள்ளித் தலைவா் சி.ஆா்.பாலகிருஷ்ணன் பட், காஞ்சிபுரம் சுகாதார சேவைகள் இணை இயக்குநா் மருத்துவா் இ.ஜீவா ஆகியோா் கலந்துகொண்டனா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் பி.பாலாஜி முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் டிடிஎம்எஸ் இணை இயக்குநா் டி.கனிமொழி, செங்கல்பட்டு மாவட்ட அமைப்புச் செயலாளா் பேராசிரியா் ஆா்.சிந்துஜா ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

இக்கருத்தரங்கில் மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ்.சரசா, மருத்துவா் எஸ்.ஆா்.ரவி, இணைப் பேராசிரியா் டி.ஆா். ராம்பிரசாத், உதவிப் பேராசிரியா் வி.ஸ்ரீதா், மருத்துவா் பி.பிரபாத்குமாா் ஆகியோா் விரிவுரை ஆற்றினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் அனைத்துத்துறை பேராசிரியா்கள், துணைப் பேராசிரியா்கள், முதுகலை மற்றும் இளங்கலை மருத்துவா்கள், செவிலியா்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT