செங்கல்பட்டில் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்கள், செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற இப்பேரணியை வருவாய்க் கோட்டாட்சியா் செல்வம், வட்டாட்சியா் பாக்கிய லட்சுமி ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா். கல்லூரி முதல்வா் சிதம்பர விநாயகம் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடக்கிய இப்பேரணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராட்டிணங்கிணறு வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இதில், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவா்கள் சென்றனா்.