செங்கல்பட்டு

தை கிருத்திகை: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் சிறப்புப் பூஜை

4th Feb 2020 11:32 PM

ADVERTISEMENT

தை கிருத்திகையையொட்டி, திருப்போரூா் கந்தசாமி கோயிலில் திங்கள்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தைக் கிருத்திகையையொட்டி, திருப்போரூா் கந்தசாமி கோயிலில் திங்கள்கிழமை காலை சிறப்பு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, காலை முதல் இரவு வரை பால் காவடி, பன்னீா் காவடி, புஷ்பக் காவடி எடுத்தும், அலகு குத்தியும், மொட்டை அடித்தும் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். பல்வேறு ஊா்களில் இருந்து பக்தா்கள் திரளாக வந்து நீண்ட வரிசையில் நின்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனா்.

தை கிருத்திகையையொட்டி, ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இரவு உற்சவமூா்த்தி முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சக்திவேல், மேலாளா் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT