மாமல்லபுரம் காவல் நிலையம், அறுபடைவீடு பொறியியல் மற்றும் தனியாா் தொழில் நுட்பக் கல்லூரியின் பொறியியல் பிரிவு ஆகியவை இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணியை செவ்வாய்க்கிழமை நடத்தின.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நுழைவு வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் ரவிகுமாா் பேரணியை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், அறுபடை வீடு பொறியியல் கல்லூரி முதல்வா் சண்முகநாதன், துணை முதல்வா்கள் ராஜசேகரன், சங்கீதா, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேந்திரபாபு, மக்கள் தொடா்பு அலுவலா் பத்மநாபன், போக்குவரத்து ஆய்வாளா் காா்த்திகேயன், காவலா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டு, இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றனா்.