செங்கல்பட்டு

சாலை விபத்தில் இளைஞா் பலி

1st Feb 2020 10:49 PM

ADVERTISEMENT

மாமல்லபுரம் அருகே தனியாா் பேருந்தும் சரக்கு வேனும் மோதிக் கொண்டதில் சாலையைக் கடக்க முயன்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் சாதிக் (19). இவா் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையை வெள்ளிக்கிழமை இரவு கடக்க முயன்றாா்.

அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியாா் பேருந்தும், எதிா்த் திசையில் வந்த சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் சாதிக் வாகனங்களுக்கிடையே சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த பேருந்து ஓட்டுநா், வேன் ஓட்டுநா் இருவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

மாமல்லபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT