செங்கல்பட்டு

போக்ஸோ சட்டத்தில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

18th Dec 2020 06:25 AM

ADVERTISEMENT


செங்கல்பட்டு: போக்ஸோ தடுப்பு சட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 9-10-2015 அன்று செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகா் தைலாவரம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், திண்டிவனத்தை அடுத்த ஆட்சிப்பாக்கத்தைச் சோ்ந்த காளிதாஸ் (36) கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு செங்கல்பட்டு சிறாா் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் காளிதாசுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி அம்பிகா தீா்ப்பளித்தாா். இதையடுத்து, காளிதாஸ் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT