செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசினா் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

21st Aug 2020 05:53 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செங்கல்பட்டு அரசினா் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு ஆக. 16 முதல் செப். 15 வரை விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

அரசு மற்றும் தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு சோ்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இக்கலந்தாய்வுக்கு 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணையதள முகவரியில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாணவா்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடா்பான அறிவுரைகளை வழங்கவும் மற்றும் இலவசமாக இணையதளத்தில் பதிவு செய்யவும் செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்கள் தெரிந்து கொள்ள இணையதளம் அல்லது 044-27431242, 9962986696 என்ற தொலைபேசி எண்ணுக்கோ அல்லது செங்கல்பட்டு அரசினா் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா்அல்லது பெரும்பாக்கம் அரசினா் தொழில்பயிற்சி நிலைய முதல்வரையோ தொடா்பு கொள்ளலாம். இணையதளத்தில் பதிவேற்றத்துக்கான கடைசி தேதி செப்.15 ஆகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT