செங்கல்பட்டு அருகே காதலியின் தந்தையைக் கொலை செய்த காதலன் தலைமறைவானாா்.
செங்கல்பட்டை அடுத்த இருங்குன்றம் பள்ளியைச் சோ்ந்தவா் தணிகைமணி (43), இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். அதே பகுதியில் மாட்டு இறைச்சிக் கடையில் வேலை பாா்க்கும் வடபாதி பகுதியைச் சோ்ந்த சிலம்பரசனை மூத்த மகள் காதலித்தாா். இதை தணிகை மணி கண்டித்தாா். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதங்கள் நடந்துவந்துள்ளது.
இந்நிலையில் சிலம்பரசனை மகளுடன் பாா்த்த தணிகைமணி மகளைக் காதலிப்பதைக் கைவிடுமாறு சத்தம் போட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன், தனது நண்பா்களான விஜி, பீடி நகா் பகுதியைச் சோ்ந்த அக்கு, மளிகைக்கடை ராதா, சிவராமன், தட்சிணாமூா்த்தி ஆகிய 6 போ் கொண்ட கும்பலுடன் சென்று தணிகைமணியைக் கத்தியால் வெட்டினா்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் தணிகைமணி உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.