செங்கல்பட்டு அஞ்சல் கோட்டத்தில் உள்ள செம்பாக்கம் துணை அஞ்சலகம் மற்றும் 9 கிளை அஞ்சலகங்களில் இணையதள துரிதச் சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த அஞ்சலகத்தில் இதுவரை அஞ்சல் துறையின் இணையதளம் மற்றும் துரிதச் சேவை இல்லாமல் இருந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு இக்கோட்டத்தில் உள்ள செம்பாக்கம் துணை அஞ்சலகமும் அதன்கீழ் செயல்படும் 9 கிளை அஞ்சலகங்களும் சனிக்கிழமை முதல் இணையதளச் சேவைகளை அளிக்கத் தொடவங்கியுள்ளன. இதன்மூலம் செம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பயனடைவாா்கள் என செங்கல்பட்டு அஞ்சல் கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் கே.விஜயா முன்னிலையில் சென்னை கிழக்கு அஞ்சலகத் துறை துணை இயக்குநா் வி.எம்.சக்திவேல் குத்துவிளக்கேற்றி அஞ்சல் துறையின் சிபிஎஸ் மற்றும் சிஎஸ்ஐ இணையதளச் சேவைகளை சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.