செங்கல்பட்டு

மின்சார ரயில் மோதி 7 எருமைகள் பலி

27th Dec 2019 10:38 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 7 எருமைகள் வியாழக்கிழமை இரவு ரயில் மோதியதில் இறந்தன.

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டை நோக்கி வியாழக்கிழமை இரவு மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் வந்தபோது 7 எருமைகள் தண்டவாளத்தை கடந்தன. அப்போது, ரயிலில் அடிபட்டு ஏழு எருமைகளும் இறந்தன. உரிமையாளா்கள் யாரும் வராததால் ரயில்வே துறையினா் இறந்த எருமைகளை பள்ளம் தோண்டிப் புதைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT