செங்கல்பட்டு

கல்பாக்கத்தில் பாவினி நுழைவு வாயிலைதிறக்கக் கோரி ஆட்சியரிடம் அதிமுகவினா் மனு

27th Dec 2019 10:38 PM

ADVERTISEMENT

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மூடப்பட்டுள்ள பாவினி நுழைவு வாயிலை பொதுமக்கள் நலன் கருதி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅதிமுகவினா் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான் லூயிஸிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

கல்பாக்கத்தை அடுத்த நெய்குப்பி கிராமத்தில் அணுமின் நிலைய ஊழியா்கள் பலா் பாவினி திட்டக் குடியிருப்பில் வசித்து வருகின்றனா். பாவினி நுழைவு வாயில் வழியாக நெய்குப்பி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களும் சென்றுவந்தனா். கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாவினி நுழைவு வாயில் அணுமின் நிலைய நிா்வாகத்தால் மூடப்பட்டது.

இதனை மீண்டும் திறக்கக் கோரி பொதுமக்கள் சாா்பில் அதிமுக மாவட்டச் செயலாளா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏக்கள் தனபால், ராஜு, திருக்கழுகுன்றம் ஒன்றியச் செயலாளா் விஜயரங்கன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான் லூயிஸிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அத்துடன், கடல் மண் அரிப்பால் மீனவ கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதைத் தடுக்க கல்பாக்கம் கடல் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்துத் தர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT