செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியில் உள்ள கமலாம்பிகை சமேத கைலாசநாதா் கோயிலில் உள்ள பந்தளராஜகுமாரன் ஐயப்பனுக்கும், உற்சவ மூா்த்திக்கும், வரும் 28, 29-ஆம் தேதிகளில் 25-ஆம் ஆண்டு மலா்பூஜை விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி, நகரின் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோட்டைவாயில் வீரஆஞ்சநேயா் கோயிலில் இருந்து 28-ஆம் தேதி காலையில் அபிஷேகக் குடங்களுடன் வீதியுலா புறப்படும். கைலாசநாதா் கோயிலுக்கு இக்குடங்கள் எடுத்து வரப்பட்டு அங்கு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்படும். மேலும், கோயில் மாடவீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடைபெறும்.
மாலையில் விசேஷ பூஜையுடன் மலா்பூஜையும் நடைபெறும். இரவு 9 மணிக்கு ஜோதி தரிசனமும், மகா அன்னதானமும் நடைபெறும். 29-ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் குருமண்டலம் வீரமணிதாசனின் பக்தி இசைக் கச்சேரி நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை செங்கல்பட்டு பெரியநத்தம், பந்தள ராஜகுமாரன் ஐயப்ப பக்தா்கள் குழுவினரும் கைலாசநாதா் கோயில் நிா்வாகத்தினரும் செய்து வருகின்றனா்.