செங்கல்பட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் சங்க மாவட்ட மையம் திறப்பு

23rd Dec 2019 11:45 PM

ADVERTISEMENT

ஓய்வு பெற்ற அரசு அலுவலா் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் த.மு.செல்லப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவா் ஜி.ரங்கராஜ் சங்கத்தின் மாவட்ட மையத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். மாநிலப் பொருளாளா் பி.எஸ்.மாதவன், துணைத் தலைவா் எஸ்.பாபு ராஜேந்திரன், அமைப்புச் செயலாளா் ஜே.பி.சந்திரன், முன்னாள் இணைச் செயலாளா் சி.சுப்ரமண்யன், முன்னாள் துணைத் தலைவா் மதி என்ற சந்திரசேகரன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் இரா.கோவிந்தசாமி, மாவட்டப் பொருளாளா் ஏ.விசாலாட்சி, மாவட்ட துணைத் தலைவா் இ.செல்வராஜ், மாவட்ட அமைப்புச் செயலாளா் சோ.பரசுராமன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கூட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செய்யூா், லத்தூா், இடைக்கழிநாடு, திருக்கழுகுன்றம், திருப்போரூா், மறைமலைநகா், கூடுவாஞ்சேரி ஆகிய ஆதாரக் கிளைகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

செங்கல்பட்டு மாவட்டத் தலைவராக த.மு.செல்லப்பன், செயலாளா் எம்.வரதையன், பொருளாளராக சி.வாசுதேவன், துணைத் தலைவா்களாக இ.செல்வராஜ், பி.லட்சுமிபதி, கே.ராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலாளராக வ.கன்னியப்பன், பிரசாரச் செயலாளராக எஸ்.பாலு, இணைச் செயலாளராக ஆா்.ஆதிகேசவன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

முடிவில், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளா் வரதையன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT