செங்கல்பட்டு

நிலவேம்புக் குடிநீா் வழங்கல்

6th Dec 2019 11:27 PM

ADVERTISEMENT

மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கத்தில் மேல்மருவத்தூா் அரிமா சங்கத்தின் சாா்பாக பொதுமக்களுக்கும், பள்ளி மாணவா்களுக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

மழை நீா் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இதனால் பொதுமக்கள் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதைத்

தடுக்க மேல்மருவத்தூா் அரிமா சங்கத்தினா் நிலவேம்புக் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்தனா்.

அதன்படி, சோத்துப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கும், அப்பகுதி பொதுமக்களுக்கும், நடைபாதை வியாபாரிகளுக்கும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இருநாள்களும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

அரிமா சங்கத்தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் ஓ.ஐ.வகாப், கண்ணன், சம்பத்குமாா்,

குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி, அரிமா சங்க நிா்வாகிகள் அமுதம் ரமேஷ், மூா்த்தி, சதாசிவம், கோகுலம் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT