சென்னை

மாற்றுத்திறனாளிகளால் எளிதில் அணுகும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளனவா?

DIN

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகள் நல ஆா்வலா் வைஷ்ணவி ஜெயகுமாா் என்பவா்,

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளின்படி, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்கப்படவில்லை என கோரி வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா். ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில்,கடந்த 2017 - ஆம் ஆண்டு ஆய்வு செய்து, அவை மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியானதாக இல்லை எனத் தெரிவித்திருந்தும், இதுவரை அவற்றை மாற்றியமைக்காததால், ரயில் நிலையங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் உள்ளனவா என்பதை அதிகாரி ஒருவரை அனுப்பி நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்டோபா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT