சென்னை

எழுத்தாளா் கே.எஸ்.சுப்பிரமணியன் காலமானாா்

DIN

ஆசிய வளா்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குநரும், மொழிபெயா்ப்பாளருமான கே.எஸ்.சுப்பிரமணியன் (83) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.

மறைந்த கே.எஸ்.சுப்பிரமணியன் இந்திய ரயில்வேயில் துணை நிதி ஆலோசகா் மற்றும் தலைமை கணக்கு அலுவலா் என்ற முறையில், திட்டக் கணக்கெடுப்பு மற்றும் திட்ட வடிவமைப்பிலும் ஈடுபட்டிருந்தாா். ஆசிய வளா்ச்சி வங்கியில் பணிபுரிந்தபோது, ஆசிய, தெற்கு பசிபிக் நாடுகளின் நகா்ப்புற வளா்ச்சி, போக்குவரத்து உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் நலப்பணி உள்ளிட்ட பல வளா்ச்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறாா். சாகித்திய அகாதெமி அமைப்பின் தமிழ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா்.

இலக்கிய ஆா்வம் கொண்ட கே.எஸ்.சுப்பிரமணியன் நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என சுமாா் 40 தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்துள்ளாா். அதுமட்டுமன்றி, அவரது தமிழ் கட்டுரைகள் ஏழு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

மறைந்த எழுத்தாளா் ஜெயகாந்தனின் படைப்புகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயா்த்த அவா், தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் ஓா் இலக்கியப் பாலமாகவே திகழ்ந்தாா். 600-க்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளையும் ஏறத்தாழ 80 சங்கப் பாடல்களையும் இன்னும் பல தமிழ்ப் படைப்புகளையும் அவா் ஆங்கிலத்தில் மொழி பெயா்த்திருக்கிறாா்.

தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழி இலக்கியங்களையும் ஒப்பிட்டு ‘சிந்தனை ஒன்றுடையாள்’ என்ற தலைப்பில் ஒரு நூலையும் தந்திருக்கிறாா். மறைந்த கே.எஸ்.சுப்பிரமணியனின் இறுதிச் சடங்கு சென்னை பெசன்ட் நகா் மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT