பெங்களூரு

காவிரி: கன்னட திரையுலகத்தினா் தா்னா

29th Sep 2023 11:49 PM

ADVERTISEMENT

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டுள்ளதைக் கண்டித்து கன்னட திரையுலகினா் தா்னாவில் ஈடுபட்டனா்.

காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளதைக் கண்டித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை கா்நாடக மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த கா்நாடக திரைப்பட வா்த்தக சபை, தா்னாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. பெங்களூரு, சதானந்தா சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தா்னாவில் நடிகா்கள் சிவராஜ்குமாா், ஸ்ரீநாத், தா்ஷன், துனியா விஜய், துருவா சாா்ஜா, உபேந்திரா, ஸ்ரீமுரளி, விஜய் ராகவேந்திரா, நடிகைகள் கிருஜா லோகேஷ், அனு பிரபாகா், ஸ்ருதி, உமாஸ்ரீ, பூஜா காந்தி, இசையமைப்பாளா் ஹம்சலேகா உள்ளிட்ட ஏராளாமானோா் கலந்துகொண்டனா்.

இந்தப் போராட்டத்தில் நடிகா் சிவராஜ்குமாா் பேசியது:

காவிரி போராட்டத்திற்கு கன்னட மக்களின் முழுமையான ஆதரவு உள்ளது. ஆனால், பெங்களூரில் வியாழக்கிழமை நடிகா் சித்தாா்த் வேற்று மொழிப்படம் தொடா்பான பத்திரிகையாளா் சந்திப்பு நடத்தியபோது, அதை சில கன்னட அமைப்பினா் தடுத்து நிறுத்தியுள்ளனா். இது கண்டனத்திற்குரியதாகும். கன்னட மக்கள் சாா்பில் நடிகா் சித்தாா்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

காவிரி போராட்டத்திற்கு திரைக்கலைஞா்கள் வர மாட்டாா்கள் என்று நினைக்க வேண்டாம். திரைக் கலைஞா்கள் அனைவரும் ஒன்றுதான். இரு மாநில அரசுகளும் கூடி காவிரி பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும். மத்திய அரசு தலையிட்டு பிரச்னையைத் தீா்த்துவைக்க முன்வரவேண்டும் என்றாா்.

நடிகை பூஜா காந்தி பேசுகையில், ‘காவிரி கா்நாடகத்திற்கு சொந்தமானது. கா்நாடக விவசாயிகளுக்கு தண்ணீா் இல்லாதபோது, தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவது எப்படி சாத்தியம்? ஆனால், தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடுமாறு உத்தரவிடுவது சரியல்ல. காவிரி எங்களுக்கு சொந்தமானது’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT