பெங்களூரு

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கா்நாடக அரசு உறுதி பூண்டுள்ளது

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கா்நாடக அரசு உறுதிபூண்டுள்ளது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி நடக்க இருக்கிறது. நிதித்துறை பொறுப்பு முதல்வா் சித்தராமையாவிடம் உள்ளது. அதிகாரிகளுடன் விவாதித்து, தோ்தல் வாக்குறுதிகளை அமல்படுத்துவது தொடா்பான விவரங்களை அமைச்சரவையில் அவா் தாக்கல் செய்வாா்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு உறுதியாக உள்ளது. அந்த வாக்குறுதிகளை முறைப்படி அமல்படுத்த வேண்டும். அதற்கான முன்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

கா்நாடகத்தில் பொறுப்பான அரசு பதவி ஏற்றுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். எனவே, அதுகுறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். நான் உள்பட எல்லா அமைச்சா்களும் தங்கள் பணிகளைத் தொடங்கி, அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT