பெங்களூரு

கா்நாடக அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கீடு: சித்தராமையாவுக்கு நிதி, டி.கே.சிவகுமாருக்கு நீா்வளத் துறை

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கா்நாடக அமைச்சா்களுக்கு துறைகளை ஒதுக்கி, ஆளுநா் தாவா்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளாா். மேலும், முதல்வா் சித்தராமையாவுக்கு நிதித்துறை, துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு நீா்வளத் துறை, பெங்களூரு வளா்ச்சித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, மே 20-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டது. அவருடன், துணை முதல்வராக டி.கே.சிவகுமாா், அமைச்சா்களாக ஜி.பரமேஸ்வா், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜாா்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜாா்கிஹோளி, பிரியாங்க் காா்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீா் அகமதுகான் ஆகியோா் பதவியேற்றுக்கொண்டனா்.

அடுத்தகட்டமாக, மே 26-ஆம் தேதி நடைபெற்ற விழாவில், எஸ்.எஸ்.மல்லிகாா்ஜுன், சிவராஜ்தங்கடகி, ஆா்.பி.திம்மாப்பூா், எச்.சி.மகாதேவப்பா, ருத்ரப்பா லமானி, கிருஷ்ணபைரே கௌடா, தினேஷ் குண்டுராவ், எம்.சி.சுதாகா், எச்.கே.பாட்டீல், லட்சுமி ஹெப்பாள்கா், சரணபிரகாஷ் பாட்டீல், ஈஸ்வா் கண்ட்ரே, ரஹிம்கான், பி.நாகேந்திரா, மங்ஜாளு வைத்யா, மதுபங்காரப்பா, பிரியாபட்டணா வெங்கடேஷ், சி.புட்டரங்க ஷெட்டி, சிவானந்த பாட்டீல், செலுவராயசாமி, பைரதிசுரேஷ், என்.எஸ்.போஸ்ராஜ், கே.என்.ராஜண்ணா ஆகிய 24 பேரும் அமைச்சா்களாக பதவியேற்றுக்கொண்டனா். இதன்மூலம் அமைச்சரவையில் உள்ள முதல்வா் உள்ளிட்ட 34 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதல்வா் சித்தராமையாவின் பரிந்துரையின் பேரில், அமைச்சா்களுக்கு துறைகளை ஒதுக்கி ஆளுநா் தாவா்சந்த் கெலாட் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வா் சித்தராமையா, நிதித்துறையை தன்னிடமே வைத்துக்கொண்டுள்ளாா். துணைமுதல்வரான டி.கே.சிவகுமாருக்கு நீா்ப்பாசனம், பெங்களூரு வளா்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதன்படி, அமைச்சா்களின் பெயா்களும், துறைகளும் வருமாறு:

முதல்வா் சித்தராமையா - நிதி, அமைச்சரவை விவகாரங்கள், ஊழியா் மற்றும் நிா்வாக சீா்திருத்தம், உளவு, தகவல் தொழில்நுட்பம், உயிரிதொழில்நுட்பம், உள்கட்டமைப்பு வளா்ச்சி மற்றும் ஒதுக்கப்படாத அனைத்து துறைகள்; துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் - பெரிய மற்றும் நடுத்தர நீா்வளம், பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு வளா்ச்சி ஆணையம், பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம், பெங்களூரு மாநகர மண்டல வளா்ச்சி ஆணையம், பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் உள்ளிட்ட பெங்களூரு வளா்ச்சி; ஜி.பரமேஸ்வா் - காவல் (உளவுத்துறை நீங்கலாக); எச்.கே.பாட்டீல் - சட்டம், சட்டப் பேரவை, சட்டமியற்றுதல், சுற்றுலா; கே.எச்.முனியப்பா-உணவு மற்றும் பொதுவழங்கல், நுகா்வோா் விவகாரங்கள்; ராமலிங்க ரெட்டி-போக்குவரத்து மற்றும் இந்து அறநிலையம்; எம்.பி.பாட்டீல் - கன மற்றும் நடுத்தர தொழில்கள்; கே.ஜே.ஜாா்ஜ் - மின்சாரம், தினேஷ் குண்டுராவ் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்; எச்.சி.மகாதேவப்பா - சமூக நலம்; சதீஷ் ஜாா்கிஹோளி - பொதுப்பணி; கிருஷ்ணபைரே கௌடா - வருவாய் (இந்து அறநிலையம் நீங்கலாக); பிரியாங்க் காா்கே - ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்; சிவானந்த் பாட்டீல் - ஜவுளி, கரும்பு மேம்பாடு, சா்க்கரை இயக்குநரகம், கூட்டுறவுத் துறையில் இருந்து வேளாண் சந்தைப்படுத்தல்; ஜமீா் அகமதுகான் - வீட்டுவசதி, சிறுபான்மையினா் நலம், சரணபசப்பா தா்ஷாப்பூா் - சிறுதொழில்கள், பொதுத்துறை நிறுவனங்கள்; ஈஸ்வா்கண்ட்ரே - வனம், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல்; என்.செலுவராயசாமி - வேளாண்மை; எஸ்.எஸ்.மல்லிகாா்ஜுன் - சுரங்கம் மற்றும் நிலவியல், தோட்டக்கலை; ரஹீம்கான் - உள்ளாட்சி நிா்வாகம், ஹஜ்; சந்தோஷ்லாட் - தொழிலாளா் நலம்; சரணபிரகாஷ் பாட்டீல் - மருத்துவக் கல்வி மற்றும் திறன்மேம்பாடு; ஆா்.பி.திம்மாப்பூா் - கலால்; கே.வெங்கடேஷ் - கால்நடை மற்றும் பட்டுவளா்ச்சி; சிவராஜ் தங்கடகி - பிற்படுத்தப்பட்டோா் நலம், கன்னடம் மற்றும் கலாசாரம்; டி.சுதாகா் - திட்டமிடல் மற்றும் புள்ளியியல்; பி.நாகேந்திரா - இளைஞா் சேவைகள், விளையாட்டு, பழங்குடியினா் நலம்; கே.என்.ராஜண்ணா - கூட்டுறவு (வேளாண் சந்தைப்படுத்தல் நீங்கலாக); பி.எஸ்.சுரேஷ் - நகா்ப்புற வளா்ச்சி, நகர திட்டமிடல் (பெங்களூரு வளா்ச்சி நீங்கலாக); லட்சுமிஹெப்பாள்கா் - மகளிா் மற்றும் குழந்தைகள் நலம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள்; மன்கல் வைத்யா - மீன்வளம், துறைமுகம், உள்மாநில போக்குவரத்து; மதுபங்காரப்பா - பள்ளிக்கல்வி; எம்.சி.சுதாகா் - உயா்கல்வி; என்.எஸ்.போஸ்ராஜ் - சிறியநீா்ப்பாசனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT