பெங்களூரு

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகள்

26th May 2023 05:54 AM

ADVERTISEMENT

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளில் சோ்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு, ஞானபாரதி வளாகத்தில் அமைந்துள்ள பெங்களூரு பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் 2023-24-ஆம் கல்வியாண்டில் முதுநிலை பட்டயம், பட்டயம், சான்றிதழ் படிப்புகளில் சோ்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்: முதுநிலை பட்டயப்படிப்புகள்-அம்பேத்கா் சிந்தனைகள், ஊரக மேலாண்மை, சுவாமி விவேகானந்தா் சிந்தனைகள், புத்தா் சிந்தனைகள், கிளினிக்கல் எம்ப்ரையாலஜி அண்ட் அஸ்சிஸ்டட் ரீ புரடெக்டிவ் டெக்னாலஜி, மனநலவியல் ஆலோசனை, மனித மனச்சாட்சியல் மற்றும் யோகா அறிவியல், தாழ்த்தப்பட்டோா் இயக்கம், யோகா பயிற்றுநா்.

ADVERTISEMENT

ஒவ்வொரு படிப்பிலும் 20 மாணவா்கள் மட்டுமே சோ்த்துக் கொள்ளப்படுவாா்கள். மாணவா்களுக்கு தங்கும் விடுதி வசதியும் உண்டு. ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். தகுதி, இட ஒதுக்கீடு, கட்டணம் குறித்து அறியவும், விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 200, தாழ்த்தப்பட்டோா்/பழங்குடியினருக்கு ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. தகுதியான மாணவா்களின் பட்டியல் ஜூன் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன் 2-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கப்பட்டு, ஜூன் 5-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT