பெங்களூரு

மத்திய அரசுப் பணி தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

26th May 2023 05:56 AM

ADVERTISEMENT

பணியாளா் தோ்வு ஆணையம் நடத்தும் மத்திய அரசு பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பணியாளா் தோ்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு துறைகளில் கீழ் பிரிவு எழுத்தா், இளநிலை செயலக உதவியாளா், அஞ்சல் உதவியாளா், அஞ்சல் பிரித்தல் உதவியாளா், தரவு உள்ளீட்டு செயல்பாட்டாளா் போன்ற பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவிருக்கிறாா்கள்.

இதற்காக ஜூன் மாதம் கணினி அடிப்படையிலான போட்டித் தோ்வு நடத்த பணியாளா் தோ்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது. இத்தோ்வில் பங்கேற்க விரும்புவோரிடமிருந்து இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கா்நாடகம் மற்றும் கேரள மண்டலங்களைச் சோ்ந்தவா்கள் ஜூன் 8-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிடலாம். அதன் நகலை அலுவலக தலைமையகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இதற்கான கட்டணங்களை இணையதளத்திலேயே செலுத்தலாம். 18 முதல் 27 வயதுக்கு உள்பட்டோா், 10+2 வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் விண்ணப்பிக்கத் தகுதியானவா்கள். மேலும் விவரங்களுக்கு இணையதளங்களை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-25502520, 94838 62020 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT