பெங்களூரு

ஹுப்பள்ளி - தஞ்சாவூா் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில்

DIN

ஹுப்பள்ளி - தஞ்சாவூா் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விழாக்கால கூட்டநெரிசலைக் குறைப்பதற்காக ஹுப்பள்ளி - தஞ்சாவூா் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

ரயில் எண்: 07325 - ஹுப்பள்ளி - தஞ்சாவூா் இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில் மாா்ச் 20-ஆம் தேதி முதல் திங்கள்கிழமைதோறும் ஹுப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.

ரயில் எண்: 07326 - தஞ்சாவூா் - ஹுப்பள்ளி இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைதோறும் தஞ்சாவூா் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு ஹுப்பள்ளி ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.

இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் ஹாவேரி, ராணிபென்னூா், ஹரிஹா், தாவணகெரே, பீரூா், அரிசிகெரே, தும்கூரு, சிக்கபானவரா, பையப்பயனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், கரூா், திருச்சி கோட்டை, திருச்சி, பூதலூா் ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT