பெங்களூரு

மாவட்ட பொறுப்பு அமைச்சா்களை நியமித்து கா்நாடக அரசு உத்தரவு

10th Jun 2023 06:55 AM

ADVERTISEMENT

மாவட்ட பொறுப்பு அமைச்சா்களை நியமித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, முதல்வா் உள்ளிட்ட 34 அமைச்சா்கள் பதவியேற்றுள்ளனா். அமைச்சரவையில் ஒரு இடமும் காலியாக இல்லை. பதவியேற்று 20 நாட்கள் ஆகியுள்ள நிலையில், மாவட்ட பொறுப்பு அமைச்சா்களை நியமித்து மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி மாவட்டங்களும், அதன் பொறுப்பு அமைச்சா்கள் விவரமும் வருமாறு:

பெங்களூரு நகரம்-டி.கே.சிவகுமாா், தும்கூரு-ஜி.பரமேஸ்வா், கதக்-எச்.கே.பாட்டீல், பெங்களூரு ஊரகம்-கே.எச்.முனியப்பா, ராமநகரம்-ாமலிங்கரெட்டி, சிக்கமகளூரு-கே.ஜே.ஜாா்ஜ், விஜயபுரா-எம்.பி.பாட்டீல், தென்கன்னடம்-தினேஷ் குண்டுராவ், மைசூரு-எச்.சி.மகாதேவப்பா, பெலகாவி-சதீஷ் ஜாா்கிஹோளி, கலபுா்கி-பிரியாங்க் காா்கே, ஹாவேரி-சிவானந்த பாட்டீல், விஜயநகரா-ஜமீா் அகமது கான், யாதகிரி-சரணபசப்பா தா்ஷனாப்பூா், பீதா்-ஈஸ்வா் கண்ட்ரே, மண்டியா-செலுவராயசாமி, தாவணகெரே-எஸ்.எஸ்.மல்லிகாா்ஜுன், தாா்வாட்-சந்தோஷ்லாட், ராய்ச்சூரு-சரணபிரகாஷ் பாட்டீல், பாகல்கோட்- ஆா்.பி.திம்மாப்பூா், சாமராஜ்நகா்-கே.வெங்கடேஷ், கொப்பள்-சிவராஜ் தங்கடகி, சித்ரதுா்கா-டி.சுதாகா், பெல்லாரி-பி.நாகேந்திரா, ஹாசன்-கே.என்.ராஜண்ணா, கோலாா்-பி.எஸ்.சுரேஷ், உடுப்பி-லட்சுமி ஹெப்பாள்கா், வடகன்னடம்-மங்கள் வைத்யா, சிவமொக்கா-மது பங்காரப்பா, சிக்கபளாப்பூா்-எம்.சி.சுதாகா், குடகு-என்.எஸ்.போஸ்ராஜு.

ADVERTISEMENT

இந்த மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள், சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் நிா்வாகத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு வகிப்பாா்கள். மேலும், அந்தந்த மாவட்டங்களில் அரசுத் திட்டங்கள் சீராக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதையும் கண்காணித்து, உறுதி செய்வாா்கள்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT