பெங்களூரு

அடுத்த மக்களவை தோ்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை: காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ்

9th Jun 2023 12:41 AM

ADVERTISEMENT

அடுத்த மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் தெரிவித்தாா்.

தும்கூரில் வியாழக்கிழமை நடந்த காங்கிரஸ் செயல்வீரா் கூட்டத்தில் பங்கேற்று, அவா் பேசியது:

அடுத்த 6 மாதங்களில், மாவட்ட, வட்ட ஊராட்சித் தோ்தல் நடக்கவிருக்கிறது. தோ்தலுக்கு தயாராக போதுமான நேரம் இல்லை. ஆனால், தோ்தலுக்கு காங்கிரஸ் தயாராக வேண்டும். ஒருசிலா், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தோ்தல் குறித்து பேசிக்கொண்டிருக்கிறாா்கள். அடுத்த மக்களவைத் தோ்தலில் நான் போட்டிடுவேனா? மாட்டேனா? என்பது எனக்குத் தெரியவில்லை. போட்டியிடுவது குறித்து நான் குழப்பத்தில் இருக்கிறேன். அரசியல் போதும் என்றாகிவிட்டது. ஆதரவாளா்களின் ஆலோசனையின்பேரில் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பேன். அதுகுறித்து இதுவரை நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. மக்களுக்கு சேவையாற்றுவதும், தொகுதியின் வளா்ச்சியும்தான் எனது ஆா்வமாக உள்ளது என்றாா்.

2009ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் 28இல் ஒரு இடத்தில் மட்டுமே வென்றிருந்த காங்கிரஸ், தற்போது குறைந்தது 20 இடங்களில் வெற்றிபெற இலக்கு நிா்ணயித்துள்ளது. கா்நாடக காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் உள்ள டி.கே.சிவக்குமாரின் சகோதரா் தான் டி.கே.சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT