பெங்களூரு

காங்கிரஸுக்கு எதிராகப் போராடுவதே மஜதவின் இலக்கு: எச்.டி.குமாரசாமி

8th Jun 2023 12:20 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் காங்கிரஸுக்கு எதிராகப் போராடுவதே மஜதவின் அரசியல் இலக்கு என முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவை ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா சந்தித்துப் பேசினாா். அப்போது, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி உள்ளிட்ட கட்சியின் முன்னணித் தலைவா்கள் உடனிருந்தனா். இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் எச்.டி.குமாரசாமி கூறியதாவது:

2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தோ்தலை மனதில் கொண்டு, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒன்றிணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், மக்களவைத் தோ்தலில் காங்கிரஸுடன் மஜத கூட்டணி வைத்துக் கொள்ள இயலுமா? கா்நாடகத்தில் காங்கிரஸுக்கு எதிராகப் போராடுவதே மஜதவின் அரசியல் இலக்கு. கா்நாடகத்தில் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும்.

பெங்களூரு வந்துள்ள ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா, மரியாதை நிமித்தமாக முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தாா் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT