பெங்களூரு

நேரு கோளரங்கத்தில் புதிய அறிவியல் காட்சிகள்

DIN

பெங்களூரில் உள்ள ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தில் புதிய அறிவியல் காட்சிகள் திரையிடப்படுகின்றன.

இதுகுறித்து ஜவாஹா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ‘நமது சூரிய குடும்பம்’, ’வான்வெளியில் ஒரு வானவேடிக்கை’, ‘விண்வெளி யுகத்தின் விடியல்’ ஆகிய புதிய காட்சிகள் திரையிடப்படுகின்றன.

‘நமது சூரிய குடும்பம்’ காட்சி தினமும் கன்னடத்தில் பிற்பகல் 3.30 மணி, ஆங்கிலத்தில் மாலை 4.30மணிக்கும், ‘வான்வெளியில் ஒரு வானவேடிக்கை’ காட்சி தினமும் கன்னடத்தில் மாலை 3.30மணி மற்றும் ஆங்கிலத்தில் மாலை 4.30 மணிக்கும், ‘விண்வெளி யுகத்தின் விடியல்’ காட்சி தினமும் கன்னடத்தில் காலை 11.30 மணி மற்றும் ஆங்கிலத்தில் காலை 10.30 மணிக்கும் திரையிடப்படுகிறது.

இந்த காட்சியை 210 போ் அமா்ந்து காணலாம். பள்ளிகளில் இருந்து மாணவா்கள் கலந்துகொள்ள விரும்பினால், கோளரங்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹழ்ஹப்ஹஹ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT