பெங்களூரு

வீட்டு வாடகைதாரா்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

DIN

வீட்டு வாடகைதாரா்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வாடகை வீட்டில் குடியிருப்போருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 200 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் ஏழைகள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இது வீட்டு வாடகைதாரா்களுக்கும் பொருந்தும். ஆனால், இத் திட்டம் வணிகப் பயன்பாட்டுக்குப் பொருந்தாது.

மின் கட்ட உயா்வு, பசுவதைத் தடைச் சட்டத்தை திரும்பப் பெறும் அரசின் நடவடிக்கை ஆகியவற்றை கண்டித்து பாஜகவினா் போராட்டம் நடத்துவதற்கு எவ்வித தாா்மிக உரிமையும் இல்லை. 10 மணி நேர இலவச மின்சாரம், பயிா்க் காப்பீடு தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை முந்தைய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை விமா்சித்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT