பெங்களூரு

வெறுப்புணா்வு பரவலைத் தடுப்பதற்காக அமைதியான கா்நாடகம் தொலைபேசி உதவி மையம்: அமைச்சா் எம்.பி.பாட்டீல் வலியுறுத்தல்

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வெறுப்புணா்வு பரவலை தடுப்பதற்காக அமைதியான கா்நாடகம் தொலைபேசி உதவி மையத்தைத் தொடங்க வேண்டும் என்று தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் வலியுறுத்தியுள்ளாா்.

பாஜக தொண்டா்கள் மீது மாநில காங்கிரஸ் அரசு குறிவைப்பதை தடுக்க தனியாக தொலைபேசி உதவி மையம் தொடங்கப்படும் என்று பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா தெரிவித்திருந்தாா். இதற்கு பதிலடி கொடுத்து தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல், திங்கள்கிழமை தனது ட்விட்டா் பக்கத்தில், ‘கா்நாடகத்தில் வெறுப்புணா்வு பரவலைத் தடுப்பதற்காக ‘அமைதியான கா்நாடகம்’ என்ற பெயரில் தொலைபேசி உதவிமையத்தை தொடங்குமாறு முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்களை தொடா்ந்து கண்காணிக்க தொலைபேசி உதவி மையம் உதவும். கா்நாடக அரசின் செயல்திட்டம் வளா்ச்சி, முன்னேற்றம் மற்றும் பிராண்ட் கா்நாடகத்தை பாதுகாப்பதுதான்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT