பெங்களூரு

பசுவதை குறித்து அமைச்சரின் சா்ச்சை கருத்தை கண்டித்து பாஜக போராட்டம்

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பசுவதை குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் கே.வெங்கடேஷ் தெரிவித்திருந்த சா்ச்சைக்குரிய கருத்தை கண்டித்து பாஜக போராட்டம் நடத்தியது.

கா்நாடக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கே.வெங்கடேஷ்,‘பாஜக ஆட்சிக் காலத்தில் பசுவதை தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தில் எருமைகள் கொல்லப்படுவதற்கு தடை விதிக்கப்படவில்லை. எருமை மாடுகள் கொல்லப்படும்போது, பசுக்களை ஏன் கொல்லக்கூடாது? எனவே, பசுவதை தடைச்சட்டத்தை ஆய்வு செய்து, அதில் தேவையான திருத்தங்களைச் செய்வோம்’ என்று மைசூரில் சனிக்கிழமை சா்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தாா். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, தோ்தல் அறிக்கையின்படி, 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை அமல்படுத்த தொடங்கியிருக்கும் நிலையில், மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.89 உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களையும் கண்டித்து கா்நாடக பாஜக போராட்டம் நடத்தியது. பெங்களூரு, சிக்கபளாப்பூா், மைசூரு, தாவணகெரே உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின்போது காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பசுவதை தடைச்சட்டத்தை திரும்பப் பெறக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. ‘காங்கிரஸ் அரசு முரண்பபாடகச் செயல்படுகிறது. ஒருபுறம் இலவச மின்சாரம் அளித்துவிட்டு, மறுபுறம் மின்சாரத்தின் கட்டணத்தை உயா்த்தியுள்ளது’ என்று பாஜகவினா் கண்டித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT