பெங்களூரு

தென்மேற்கு பருவமழை எதிரொலி: ஜூன் 10 முதல் கொங்கண் ரயில்வே தடத்தில் ரயில்களின் நேரத்தில் மாற்றம்

DIN

 தென்மேற்கு பருவமழை காரணமாக, ஜூன் 10 முதல் அக். 31ஆம் தேதி வரை கொங்கண் ரயில்வே தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் ஜூன் 9ஆம் தேதி முதல் செப். 30ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை பெய்யவிருக்கிறது. இந்த காலகட்டத்தில் கனமழை பெய்து அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், ரயில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொங்கண் ரயில்வே தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் நேரத்தின் விவரம் வருமாறு:

மங்களூரு சென்ட்ரல்-மும்பை எல்டிடி மத்சயகங்கா விரைவுரயில் (12620) மங்களூரில் இருந்து நண்பகல் 12.45 மணிக்கு பதிலாக பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும். அதன் இணை ரயில், 12619 மும்பை-மங்களூரு விரைவுரயில் மங்களூருக்கு காலை 10.10 மணிக்கு பதிலாக, காலை 7.40 மணிக்கு வந்துசேரும்.

ரயில் எண் 12133-மும்பை சிஎஸ்எம்டி-மங்களூரு சந்திப்பு அதிவிரைவுரயில் மங்களூருக்கு மாலை 3.40 மணிக்கு பதிலாக நண்பகல் 1.05 மணிக்கு வந்துசேரும். இதன் இணை ரயில் 12134-மங்களூரு-மும்பை ரயில் மங்களூரில் இருந்து நண்பகல் 2.00 மணிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 06602-மங்களூரு சென்ட்ரல்-மட்காவ்ன் தினசரி சிறப்பு விரைவுரயில் மங்களூரில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மட்காவ்னுக்கு நண்பகல் 1.10 மணிக்கு பதிலாக நண்பகல் 1.15 மணிக்கு சென்று சேரும். ரயில் எண் 06601-மட்காவ்ன்-மங்களூரு சென்ட்ரல் விரைவுரயில், மட்காவ்னில் இருந்து நண்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு, மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 9.05 மணிக்கு பதிலாக 9.40 மணிக்கு வந்துசேரும்.

ரயில் எண் 16346-திருவனந்தபுரம் சென்ட்ரல்-மும்பை எல்டிடி நேத்ராவதி விரைவுரயில், திருவனந்தபுரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, வழித்தடத்தில் இருக்கும் ரயில் நிலையங்களில் இருந்து 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் முன்பாக வந்து செல்லும். இந்த ரயில் மங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.50 மணிக்கு பதிலாக 9.35 மணிக்கு புறப்பட்டு, மும்பை எல்டிடி ரயில்நிலையத்திற்கு மறுநாள் காலை 5.05 மணிக்கு சென்று சேரும். ரயில் எண் 16345-மும்பை எல்டிடி-திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில், காலை 11.40 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு பதிலாக 5.45 மணிக்கு மங்களூருக்கு வந்துசோ்கிறது. இதேபோல, கொங்கண் ரயில் தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களின் நேரமும் மாற்றப்படும் என்று கொங்கண் ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT