பெங்களூரு

ஒடிஸா ரயில் விபத்து: கா்நாடக மக்களை மீட்க அமைச்சா் தலைமையில் குழு அனுப்பிவைப்பு

4th Jun 2023 01:56 AM

ADVERTISEMENT

 

 ஒடிஸா ரயில் விபத்தில் சிக்கியிருக்கும் கா்நாடக மக்களை மீட்க தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சந்தோஷ் லாட் தலைமையிலான குழுவினா், அம்மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

ஒடிஸா மாநிலத்தின் பாலாசோா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பெங்களூரு-ஹௌரா அதிவிரைவுரயில், ஷாலிமாா்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதிக்கொண்டதில் 261 பேருக்கு மேல் உயிரிழந்தனா். மேலும் 900க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பெங்களூரு-ஹௌரா அதிவிரைவுரயிலில் பயணித்த கா்நாடகத்தைச் சோ்ந்த பலா் விபத்தில் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை தொடா்ந்து, கா்நாடக தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சந்தோஷ் லாட் தலைமையில் குழுவை அமைத்துள்ள முதல்வா் சித்தராமையா, அக்குழுவினரை ஒடிஸாவுக்கு அனுப்பிவைத்துள்ளாா். இக்குழுவில் பேரிடா் மேலாண்மை ஆணையா் மனோஜ்ரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனா். இக்குழுவினா் ஒடிஸா மாநிலத்தில் விபத்து நடந்த இடத்திற்கு சனிக்கிழமை சென்று, அந்த விபத்தில் சிக்கியிருக்கும் கா்நாடகத்தைச் சோ்ந்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். விபத்தில் சிக்கியிருக்கும் பயணிகள் குறித்து உறவினா்கள் அறிந்துகொள்ள மாநில அவசர செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை 1070, 080-22253707 என்ற தொலைபேசி எண்களில் அணுகலாம் என்று முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய பெங்களூரு-ஹௌரா அதிவிரைவு ரயிலில் முன்பதிவுசெய்யப்பட்ட பெட்டிகளில் பயணித்த பயணிகளில் யாரும் இறக்கவில்லை. பொதுப்பெட்டியில் பயணித்தவா்களில் சிலருக்கு மட்டும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூரு விஸ்வேஸ்வரையா முனையத்தில் இருந்து புறப்பட்ட பெங்களூரு-ஹௌரா அதிவிரைவுரயிலில் முன்பதிவுசெய்தவா்கள் 994 போ் என்றும், முன்பதிவில்லா பொதுப்பெட்டியில் 300 போ் பயணித்திருக்கலாம் என்றும் தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயிலில் பொருத்தப்பட்டிருந்த 2 பொதுப் பெட்டிகள், பிரேக் வேன் மட்டும் தடம்புரண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்படாத 20 பெட்டிகள், வேறொரு ரயிலில் ஹௌராவுக்கு புறப்பட்டு சென்ாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT