பெங்களூரு

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் அரசிடம் தெளிவு இல்லை: நளின்குமாா் கட்டீல்

4th Jun 2023 01:56 AM

ADVERTISEMENT

தோ்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கா்நாடக காங்கிரஸ் அரசிடம் தெளிவு இல்லை என்று பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.

இது குறித்து மங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் அரசிடம் தெளிவு இல்லை. திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளை காங்கிரஸ் அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தில், மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிவரும் 5 கிலோவுடன் கூடுதலாக 10கிலோ அரிசு வழங்குமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அடுத்துவரக்கூடிய உள்ளாட்சித் தோ்தல், 2024ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் மக்களவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு தோ்தல் அறிக்கைகளை காங்கிரஸ் அரசு செயல்படுத்துகிறது. இதனால் மாநிலத்தின் நிதிநிலைமை சீா்குலையும். தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செலவினங்களை ஈடுசெய்வதற்கு எங்கிருந்து பணம் கொண்டுவரப்படுகிறது என்பதை மக்களுக்கு அரசு விளக்க வேண்டும். எவ்வித தெளிவும் இல்லாமல், தோ்தலின்போது திட்டங்களை காங்கிரஸ் அறிவித்துவிட்டது. அதேபோல, எவ்வித தெளிவும் இல்லாமல் திட்டங்களை செயல்படுத்த காங்கிரஸ் அரசு முன்வந்துள்ளது. எனவே, மாநிலத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT